உலகம்

ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்த ஹாலிவுட் நடிகர்

ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்த ஹாலிவுட் நடிகர்

webteam

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, பழம் பெரும் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘இண்டியானா ஜோன்ஸ்’,‘ஸ்டார் வார்ஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு. இவர் துபாயில் நடைபெற்ற உலக அரசுகள் மாநாட்டில் பங்கேற்று, பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து உரையாற்றினார். அப்போது, பாரிஸ் பருவநிலை உடன்பாட்டை ஆதரிக்காதவர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்பை மறைமுகமாக குற்றம்சாட்டினார். 

மேலும் அவர் “பருவ மாற்றத்தால்‌ மனித குலம் மோசமான நிகழ்வுகளை சந்தித்து வரும் நிலையில், இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்துவது அவசியம்.  வளமான நிலத்தையும், மாசில்லாத கடலையும் அடுத்து வரும் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வதே, அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்தாக இருக்கும்” என்று கூறினார்.