உலகம்

தென்கொரியாவில் ட்ரம்ப்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

தென்கொரியாவில் ட்ரம்ப்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

webteam

ஆசிய நாடுகளின் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று தென்கொரியா சென்றடைந்தார். 

தென்கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பிற்கு அங்குள்ள தார்மக் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கொரியாவில், அமெரிக்க துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியை பார்வையிடும் ட்ரம்ப்,‌ அந்நாட்டு அதி‌பர் மூன் ஜே இன்னை சந்தித்து வடகொரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் வருகையால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.