பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேக்ரனும், அமெரிக்க அதிபர் டிரம்பும் வரும் 25ம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மேக்ரனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபரும், பிரான்ஸ் அதிபரும் வரும் மே 25ம் தேதி பிரசெல்ஸ் நகரில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.