உலகம்

எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க.. செல்நம்பர் கொடுத்த ட்ரம்ப்!

எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க.. செல்நம்பர் கொடுத்த ட்ரம்ப்!

webteam

உலகத் தலைவர்கள் தன்னுடைய செல்போன் எண்ணுக்கு நேரடியாக அழைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது பாதுகாப்பு விவகாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
கனடா, மெக்சிகோ, பிரான்ஸ் நாட்டுத் தலைவர்களுக்கு டிரம்பின் தனிப்பட்ட செல்போன் எண் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கனடா பிரதமர் ஜஸ்டின் மட்டும் டிரம்பை செல்போனில் அழைத்து பேசியுள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உலகத் தலைவர்கள் அலுவலக ஊடகத்தின் மூலமே பேசுக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நடைமுறைகளை டிரம்ப் மீறியிருப்பது பாதுகாப்பு விவகாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.