உலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு ரத்து : அமெரிக்கா அறிவிப்பு

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை ரத்து என அமெரிக்க அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது வடகொரியாவுக்கு சிறப்பானதாக அமையும் என்றும் அவர் கூறினார். இதனைதொடர்ந்து அடுத்த வாரம் திட்டமிட்டபடி சிங்கப்பூரில் இச்சந்திப்பு நடக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். 

இதற்கிடையே ட்ரம்புடனான சந்திப்பை ரத்துச் செய்யப் போவதாக கிம் ஜாங் உன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை சந்தித்த பிறகே, கிம் ஜாங் உன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக குற்றம்சாட்டி வந்தது அமெரிக்கா. இதனால் இந்தச் சந்திப்பு‌ நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக  அமெரிக்க அறிவித்துள்ளது.