இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு ஜெருசலேமை தலைநகரமாக கொண்டு பாலஸ்தீன் நாட்டை உருவாக்கலாம் என்றும் இஸ்ரேல் 4 ஆண்டுகளுக்கு குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டனில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், அமைதியை நோக்கி இஸ்ரேல் மிக முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் யோசனையை இஸ்ரேல் வரவேற்றாலும் பாலஸ்தீன தலைவர்கள் நிராகரித்துவிட்டனர். இது இஸ்ரேலுக்கு சாதகமாக உள்ளது என பாலஸ்தீன தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வரும் திட்டம் இது என ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் அரபு நாடுகளும் இதை எதிர்த்துள்ளன