ஜி-20 மாநாட்டிற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு முறை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது ட்ரம்ப்பும், புதினும் அலுவல் ரீதியாக ஒருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இருவரும் இரண்டாவது முறையாக ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் 2-வது முறையாக சந்தித்தாக ஊடங்களில் வெளியான இந்த தகவலை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது அலுவல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் மரியாதை நிமித்தமான சிறிது நேர சந்திப்பு எனவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. இருவரும் எவ்வுளவு நேரம் பேசிக்கொண்டனர், சந்திப்பு எவ்வுளவு நேரம் நீடித்தது என்பது குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை. இது ரகசிய சந்திப்பு கிடையாது என ட்ரம்ப்பும் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் ட்ரம்பிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.