உலகம்

மக்கள் தேவையின்றி வெளிநாடுகள் செல்லவேண்டாம் - கனடா பிரதமர்

மக்கள் தேவையின்றி வெளிநாடுகள் செல்லவேண்டாம் - கனடா பிரதமர்

கலிலுல்லா

ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என கனடா மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விடுமுறைக்காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதால் கனடா மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பதாகவும் பெரியவர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.