வீடியோ காட்சி பிபிசி
உலகம்

யானைக்கு பீர் ஊற்றிய நபர்.. விசாரணையைத் துவக்கிய கென்யா!

கென்யாவில் ஸ்பானிஷ் நபர் ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றுவது போன்ற வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Prakash J

கென்யாவில் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றியதாகக் கூறப்படும் ஸ்பானிஷ் நபர் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கென்யா வனவிலங்கு சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது பீர் அல்ல, குளிர்பானம் என தகவல்கள் வெளியாகின. பிபிசி இதை உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது.

கென்யாவின் ஒரு தனியார் வனவிலங்கு சரணாலயத்தில், ஸ்பானிஷ் நபர் ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். ’ஒரு தந்த நண்பருடன் ஒரு தந்தம்’ என்ற பெயரில் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், கென்யா வனநல ஆர்வலர்களின் எதிர்ப்பைச் சந்தித்தார். இதையடுத்து, அவரது பதிவு நீக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் ஊற்றியது பீர் அல்ல; அது ஓர் குளிர்பானம் என தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக உண்மையைக் கண்டறிவதில் பிபிசி களமிறங்கியது. லைக்கிபியாவின் மத்திய மாவட்டத்தில் உள்ள ஓல் ஜோகி கன்சர்வேன்சியில் படமாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் பிபிசி, அது உண்மை என அங்கீகரிக்க முடிந்ததாக அங்குள்ள வன ஆர்வலர்களிடம் கூறியுள்ளது. கென்யாவின் மாசாய் மாராவில் வருடாந்திரத்தில் வனவிலங்குகள் இடம்பெயர்வது வழக்கம். அப்படியான நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்தது.

வீடியோ காட்சி

அப்போது, சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று இடம்பெயர்ந்த காட்டெருமைகளைத் தடுத்து படம்பிடித்தனர். அந்த நிகழ்வுக்குப் பிறகு இது நடைபெற்றிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கென்யா வனவிலங்கு சேவை (KWS) இந்த சம்பவத்தின் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் தனது சமூக ஊடக கணக்குகளில் அவரது பெயரைப் பயன்படுத்துவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், அவர் விலங்குகளுடன் இருக்கும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். வீடியோ ஒன்றில், இரு யானைகளுக்கு உணவாக கேரட்டைக் கொடுக்கும் அவர், ‘நாங்கள் பீர் சாப்பிடுகிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார். அதுபோல், காண்டாமிருகத்திற்கு கேரட் கொடுக்கும் படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், டிக்டாக்கில் தன்னை ஒரு ’அட்ரினலின் போதை மருந்து பிடித்தவர்’ என்று வர்ணித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.