மியான்மர் - ட்ரம்ப் புதிய தலைமுறை
உலகம்

இன்றைய உலகம் | ட்ரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு முதல் மியான்மரில் நீட்டிக்கப்பட்ட அவசர நிலை வரை!

ட்ரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு முதல் மியான்மரில் நீட்டிக்கப்பட்ட அவசர நிலை வரை இன்று உலகளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்...

PT WEB
  • கனடா, மெக்சிகோ, சீனா மீதான கூடுதல் வரிவிதிப்பு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

  • டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் பிரிக்ஸ் அமைப்பு ஈடுபடவில்லை. ட்ரம்ப் வரிவிதிப்பு எச்சரிக்கையை தொடர்ந்து ரஷ்யா விளக்கம்.

  • மேலும் 3 பிணைக் கைதிகளை இன்று விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்குமாறு இஸ்ரேலில் வலுக்கும் குரல்.

ஹமாஸ்
  • மியான்மரில் அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு. ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தலை நடத்துவதில் தொடரும் சிக்கல்.

  • விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற பெருமையை பெற்றார் சுனிதா வில்லியம்ஸ். 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்ணில் நடந்து புதிய சாதனை.

  • அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டலுக்கு உடனடியாகவும், வலுவாகவும் பதிலளிக்கப்படுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

  • இலங்கையில் ராணுவம் வசமிருக்கும் தமிழர்களின் நிலங்கள் திருப்பி அளிக்கப்படுமென அதிபர் அநுரகுமார திசநாயக அறிவித்துள்ளார்.

  • அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பனிப்பொழிவு காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடமேற்கு மற்றும் மத்திய சீனாவில் உள்ள நகரங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவால் முக்கிய சாலைகளில் பனி தேங்கி காட்சியளிக்கிறது.