உலகம்

அமெரிக்க டெக் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

அமெரிக்க டெக் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

webteam

சுந்தர் பிச்சை, டிம் குக் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி வாஷிங்டனில் ஆலோசனை நடத்தினார். 

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் முதல்முறை அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் இருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக், அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பண மதிப்பிழப்பு விவகாரத்தால் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்ததாகத் தெரிகிறது. மேலும், மேக் இன் இந்தியா திட்டம் குறித்தும் அமெரிக்க டெக் நிறுவன தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பை நாளை சந்திக்க இருக்கிறார்.