Valeria Marquez  முகநூல்
உலகம்

நேரடி ஒளிபரப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்... என்ன நடந்தது?

மெக்சிகோவில் , 23 வயது டிக்டாக் பிரபலப் பெண் ஒருவர், நேரடி ஒளிப்பரப்பின்போதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜாலிஸ்கோவின் குவாடலஜாராவைச் சேர்ந்தவர் வலேரியா மார்க்வெஸ் (23). இவர் அழகியல் நிபுணர் ஆவார். டிக்டாக்கில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக கருதப்படும் இவர், 2 லட்சத்திற்கு மேலான அதிக பின்தொடர்பவர்களையும் கொண்டிருக்கிறார். 2002 இல் பிறந்த இவர், 2021 இல் மிஸ் ரோஸ்ட்ரோ அழகுப் போட்டியை வென்றார். ஜாலிஸ்கோவின் சபோபனில் உள்ள சாண்டா மரியா ஷாப்பிங் பிளாசாவில் மார்க்வெஸ் ஒரு அழகு நிலையத்தை நடத்தி வந்தார்.

இந்தநிலையில்தான், கடந்த செவ்வாய் கிழமைஅன்று, மார்க்வெஸ் தனது அழகு நிலையத்திலிருந்து டிக்டாக்கில் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்துள்ளார் . அப்போது, அறையின் வெளியே வந்து நின்ற மர்ம நபர் ஒருவர், “ ஹேய்.. நீங்கள் வலேரியா தானே ?” என்று கேட்க, வலேரியாவும், “ ஆம் ” என்று கூறுகிறார்.

கூறிய அடுத்த நொடி பொழுதே, 3 முறை சரமாறியாக துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினார் லவேரியா. துப்பாக்கி ஏந்திய ஒருவர் அவரது சலூனுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த காட்சிகள் அனைத்தும் லைவ் ஸ் ரீமிங்கிலேயே நடந்திருப்பது காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. வீடியோவில் இறுதில் யாரோ ஒரு நபர் போனை எடுத்துப்பார்ப்பதும் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதலாக, நேரடி ஒலிப்பரப்பு தொடங்கிய சமயத்தில் பேசிய வலேரியா, தனது டிக்டாக் பாலோவர் ஒருவர் தான் அழகுநிலையத்தில் இல்லாத நேரத்தில் விலையுயர்ந்த பரிசோடு தன்னை காண வந்ததாகவும், ஆனால் அப்போது தான் அங்கே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அந்த பரிசிற்காக தான் காத்திருக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்ததும் பலரையும் எரிச்சலடைய வைத்ததாக கூறப்படுகிறது .

மேலும், வேலாஸ்கோ என்ற நபருக்கும் வலேரியாவில் இறப்பில் தொடர்பிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர், வலேரியா மார்க்வெஸுடன் பல மாதங்களாக உறவில் இருந்ததாகவும், அவரது ரசிகர்களிடமிருந்து வலேரியா விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதால், வேலாஸ்கோ கோபம் கொண்டதாகவும் இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், யார் இந்த கொலையை செய்தது என்பது குறித்தான தெளிவான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.  

கொலை நடந்த இடமான ஜாலிஸ்கோ, மெக்சிகோவின் 32 மாநிலங்களில், கொலையில் 6 ஆவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின்படி, 906 வழக்குகள் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மெக்சின் அதிகாரிகள் இக்கொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதோடு, மனித உரிமை ஆர்வர்களும் பெண் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.