டிக்டாக் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | டிக்டாக் செயலிக்கு உறுதியான தடை!

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ய மறுத்துவிட்டதால், அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

PT WEB

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ய மறுத்துவிட்டதால், அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

டிக்டாக்

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, நாளைக்குள் அந்தச் செயலி அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட வேண்டும். இல்லையெனில், தடையை எதிர்கொண்டாக வேண்டும்.

இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அந்நாட்டு அரசமைப்பை மீறும் வகையில் உள்ளதாக கூறி, டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் சட்டம் உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டம் அரசமைப்பை மீறும் வகையில் இல்லை என கூறி, அதனை ரத்துசெய்ய மறுத்துவிட்டது. இதனால், டிக்டாக் செயலிக்கான தடை விதிக்கப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.