உலகம்

ORACLE நிறுவனத்தோடு கைகோர்க்கும் டிக்-டாக்..?

ORACLE நிறுவனத்தோடு கைகோர்க்கும் டிக்-டாக்..?

EllusamyKarthik

ஷார்ட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனான டிக்-டாக் ORACLE நிறுவனத்தோடு இணைந்து அமெரிக்காவில் இயங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் டிக்-டாக் மொபைல் அப்ளிகேஷனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவிலும் சீன மொபைல் அப்ளிகேஷனான டிக்-டாக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அந்நாடு திட்டமிட்டு வருவதாக அண்மையில் அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். 

‘அமெரிக்காவில் டிக்-டாக் அப்ளிகேஷன் சிக்கலின்றி இயங்க வரும் செப்டம்பர் 20க்குள் அதன் தொழில்நுட்பத்தை நிர்வகிக்க அமெரிக்க நிறுவனத்தை ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் டிக்-டாக்கிற்கு தடை விதிக்கப்படும்’ என எச்சரித்திருந்தார் டிரம்ப்.

அதனையடுத்து டிக்-டாக் நிறுவனம் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் டீல் பேசியது. அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு டெக்னாலஜி நிறுவனமான ORACLE உடன் இணைந்து செயல்பட டிக்-டாக் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனங்கள் உறுதியாக தெரிவிக்காத சூழலில் டிக்-டாக் தனது தொழில்நுட்பத்தை வெளிநாட்டு நிறுவனங்களோடு விற்பனை செய்ய வேண்டுமென்றால் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியம் என சீன அரசு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது.