china rocket x page
உலகம்

சீன விண்வெளி மையத்திற்கு சென்ற 3 வீரர்கள்.. தங்கியிருந்து ஆய்வு செய்ய முடிவு!

சீனாவில் இருந்து 3 வீரர்கள் விண்வெளியில் அந்நாடு அமைத்திருக்கும் மையத்தில் இணைந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு இருந்த 3 பேர் வரவேற்றனர்.

PT WEB

சீனாவில் இருந்து 3 வீரர்கள் விண்வெளியில் அந்நாடு அமைத்திருக்கும் மையத்தில் இணைந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு இருந்த 3 பேர் வரவேற்றனர், முன்னதாக வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் என்ற ஏவுதளத்தில் இருந்து ஷென்சூ 20 என்ற ராக்கெட் 3 வீரர்களை சுமந்துகொண்டு விண்வெளிக்கு புறப்பட்டது. இக்காட்சிகள் சீன அரசுத் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த 3 பேரும் சீன விண்வெளி மையத்தில் அக்டோபர் மாதம் வரை தங்கியிருந்து மீன்கள், எலிகள் போன்றவற்றின் உடல் நிலை விண்வெளியில் எவ்வாறு மாற்றம் அடைகின்றன என்பது குறித்து ஆய்வு செய்வார்கள்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை 3 வீரர்களை சுழற்சி முறையில் விண்வெளி மையத்திற்கு சீனா அனுப்பி வருகிறது. அடுத்த முறை பாகிஸ்தானை சேர்ந்த 2 பேரை சீனா தனது விண்வெளி மையத்திற்கு அழைத்துச்செல்ல உள்ளது. விண்வெளியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுவான விண்வெளி மையம் சீனாவின் விண்வெளி மையம் ஆகிய இரு மையங்கள் ஆய்வை மேற்காண்டு வருகின்றன.