உலகம்

’ஊதிய உயர்வு கோரிக்கை’ - ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் போராட்டம்

’ஊதிய உயர்வு கோரிக்கை’ - ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் போராட்டம்

Sinekadhara

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அந்நாட்டின் தொழிலாளர்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது போராட்டத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டது. என்றாலும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் சிட்னி நகரின் முக்கிய வீதிகளில் செவிலியர்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.