சீனா தனது நாட்டில் சுமார் 10 லட்சம் டன் தோரியம் இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை சீனாவால் உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருப்பது உலக நாடுகளின் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.
சீனாவின் பயூன் ரோபோ பகுதியில் பல்வேறு கனிமங்கள் கிடைத்து வரும் நிலையில் தோரியம் இருப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்றது. சுரங்க வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் 60,000 ஆண்டுகளுக்கு சீனாவின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 1 மில்லியன் டன் தோரியம் கண்டுபிடிக்கப்பட்டது.
தோரியம் என்பது அணு உலைகளுக்கு பாரம்பரிய யுரேனியத்திற்கு மாற்றாக கருதப்படுகிறது. சரியாக பயன்படுத்தப்பட்டால், தோரியம் வரக்கூடிய நாட்களில் நிலையான அணுசக்தியை வழங்க முடியும்.
தோரியத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது செலவு குறைக்கப்படுவதோடு சுற்றுசூழல் பாதிப்பும் குறையும். சீனாவின் இந்த புதையல் உலக நாடுகளுக்கிடையே கவனம் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் சீனா மேலும் தோரியம் அணுமின் நிலையங்களைஉருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.