உலகம்

ட்ரம்புக்கு எதிராக பிற ஜி-7 கூட்டமைப்பு தலைவர்கள்

ட்ரம்புக்கு எதிராக பிற ஜி-7 கூட்டமைப்பு தலைவர்கள்

webteam

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிற கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முறைத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கனடாவில் நடந்த ஜி -7 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் ரஷ்யா‌ மீண்டும் பங்கேற்க விரும்புவதை ட்ரம்ப் முன்மொழிந்தார். இதற்கு, ரஷ்யா இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தினை ஜி7 கூட்டமைப்பு தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டிருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பதிலடி கொடுத்தார். வரி கொள்கையை ட்ரம்ப் கைவிட வேண்டும் உள்பட ட்ரம்புக்கு எதிரான கருத்துகளை நேரடியாக பிற நாட்டின் தலைவர்கள் முன்வைத்தனர். இதனை, ட்ரம்ப் ஏற்க மறுத்த நிலையில் மற்ற உறுப்பு நாடுகளை விமர்சிக்கும் வகையிலும் ட்ரம்ப் பேசினார்.

இதனால் ட்ரம்ப் ஜி-7 உச்சிமாநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கைகட்டிய நிலையில் ட்ரம்ப் இருப்பது போலவும், ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பிற கூட்டமைப்பு தலைவர்கள் ட்ரம்புக்கு எதிரே கூட்டமாக நிற்பது போலவும் எடுக்கப்பட்டுள்ளது. விமர்சனங்களை எழுப்பியுள்ள இந்தப் புகைப்படத்தை ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகி உள்ளது