உலகம்

வெனிசுலாவில் உணவுக்காக திருடப்படும் விலங்குகள்

வெனிசுலாவில் உணவுக்காக திருடப்படும் விலங்குகள்

webteam

உணவுத் தட்டுப்பாடு காரணமாக வெனிசுலாவின் ‌உயிரியல் பூங்காவில் விலங்குகள்‌ திருடப்படுகின்றன. 

வெனிசுலாவின் மேற்கு மாநிலமான ஜூலியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூங்காவில் இருந்து இதுவரை 10 காட்டெருமைகள், பன்றி போன்ற விலங்குகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் திருடப்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவே உணவு தட்டுப்பாடுக்கு காரணம் என எதிர்கட்சியினர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 
இது குறித்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறுகையில், எதிர்கட்சியினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுவதால்தான் உணவு விநியோகம் முற்றிலுமாக ஸ்தம்பித்து‌ உள்‌‌ளது என தெரிவித்தார்.