உலகம்

பையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்!

பையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்!

webteam

மலைப்பாம்புகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் பிரைன் கண்டி. பாம்பு பிரியரான இவர், அவற்றை இனப்பெருக்கம் செய்து விற்று வருகிறார். கடந்த சனிக்கிழமை சான் ஜோஸில் உள்ள மார்டின் லூதர் கிங் நூலகத்தில் பாம்புகள் பற்றி விளக்கம் அளித்துவிட்டு தனது காருக்குத் திரும்பினார். 

கதவைத் திறந்து பார்த்தால், உள்ளே இருந்த பையை காணவில்லை. அதன் உள்ளே 4 மலைப்பாம்புகள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அதோடு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதில் தனது பாம்பை யாரோ திருடி விட்டு சென்றுவிட்டார்கள். அதைப் பார்த்தால், தனக்கு தகவல் தெரிவித்து உதவும்படி கேட்டிருக்கிறார் பிரைன். அந்த பாம்புகளுக்கு வைத்த பெயர், நிறம் ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.