உலகம்

அமெரிக்காவில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

அமெரிக்காவில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் அவர் வாஷிங்டன் வந்து சேர்ந்தார்.

அதிபராகப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை ட்ரம்ப் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இன்று நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட ‌அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து உலகை மீண்டும் வழிநடத்தலாம் என்று தெரசா மே ஏற்கெனவே கூறியிருந்தார்.