உலகம்

உலகின் நீளமான கால்கள்: கின்னஸ் சாதனை படைக்கும் இளம்பெண்

sharpana

உலகின் நீளமான கால்களைக் கொண்ட 17 வயது இளம் பெண் கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் பார்க்கைச் சேர்ந்த மேசி கர்ரின் என்ற இளம் பெண்ணின் இடது கால் 135.26 செ.மீ, வலது கால் 134.3 செ.மீ நீளமும் கொண்டதால் உலகின் மிக நீண்ட கால்கள் என்று அடுத்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார்.

இவரது கால்கள் மட்டுமே ஒன்னரை அடி நீளம் கொண்டவை. இவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் இருந்தாலும் மேசி மட்டும்தான் உயரமானவராக காணப்பப்பட்டு ஆச்சர்யமளிக்கிறார். இவரது, உயரத்தை ஸ்டூல் போட்டு நின்றால்தான் எட்ட முடிகிறது.

”எனக்கு நீண்ட கால்கள் இருப்பது சவாலாக இருக்கிறது. சில இடங்களில் கதவுகளைத் திறந்து நுழைவது, கார்களில் ஏறுவது, உயரத்திற்கேற்ற துணிகள் கிடைப்பது கடினம் என்றாலும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.

ஆனால், எனது பள்ளியில் கைப்பந்து விளையாட்டு விளையாடும்போது, ஈஸியாக இருக்கிறது”  என்று புன்னகையோடு கூறும் மேசி டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக உள்ளார். கின்னஸ் சாதனையோடு மாடலிங் உலகில் நுழைந்து ’உலகின் உயரமான மாடல்’ என்ற சாதனையையும் படைக்கவுள்ளார்.