உலகம்

தெற்கு ஜார்ஜியாவை மோதவுள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

EllusamyKarthik

மாறிவரும் தட்பவெட்ப சூழலினால் அண்டார்டிக் தீவில் உள்ள பனி அடுக்குகள் அதன் அசல் தன்மையை இழந்து மெல்லமாக உருகி வருகின்றன. அதனால் கடல் நீர்மட்டம் உயருவதோடு நாளுக்குநாள் பூமியின் வரைப்படத்தில் மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

அண்டார்டிக்காவின் லார்சன் சி பனி அடுக்கிலிருந்து கடந்த 2017இல் உடைந்த 150 கிலோ மீட்டர் நீளமும், 48 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட A 68A என்ற பனிப்பாறை தற்போது தெற்கு ஜார்ஜியாவில் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் பிராந்தியத்தை மோத உள்ளது. 

இந்த பனிப்பாறை அந்த தீவு பகுதியின் நிலப்பரப்புக்கு நிகரானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தீவு பகுதியாக உள்ள பிராந்தியாத்தில் நீர் நாய்களும், பென்குயின்களுக்கும் வாழ்விடமாக உள்ளது அந்த நிலப்பரப்பு. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அந்த தீவுப்பகுதியை மோதுவது பொருளாதார ரீதியாகவும், சூழல் ரீதியாகவும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் ஜார்ஜியா வருத்தம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2004இல் இதே மாதிரியான ஒரு பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவை மோதிய நிலையில் ஏரளாமான பென்குயின்கள் அந்த தீவு பகுதியின் கடற்கரையில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.