ஜெர்மனி பெண்
ஜெர்மனி பெண் முகநூல்
உலகம்

ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நிர்வாணமாக தூக்கி சென்ற பெண் ஜெர்மனியை சேர்ந்தவர்! வெளியான அதிர்ச்சி தகவல்!

PT WEB

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான மோதல் தற்போது போராக வெடித்துள்ளது. இரு பிரிவினரும் மாற்றி மாற்றி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இச்சூழலில் உடலில் ஆடைகள் இன்றி ஒரு பெண்ணின் உடலை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தூக்கிச் சென்றனர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இஸ்ரேல் ராணுவ வீராங்கனை இவர் என கூறி, கால்களால் அப்பெண்ணின் உடலை மிதித்து முழக்கமிட்டுள்ளனர்.

ஷானி லூக்கின் தாய்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை வேதனையடைய வைத்தது. இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்தப்பெண் ஜெர்மனியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஷானி லூக் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த அவர் பச்சைக்குத்தும் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இஸ்ரேலில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஷானு லூக்கின் தாயார் பேசும் வீடியோவைவும் வெளியாகியுள்ளது. ஹமாஸ் குழுவினரால் கொல்லப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட பெண், தன்னுடைய மகள் என்றும் அவரது உடலையாவது தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் ஷானுவின் தாயார்.

ஹமாஸ் குழுவினர் முதன் முதலில் தாக்குதல் நடத்தியது இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில்தான். அந்த தாக்குதலின் போது தான் ஷானி லூக் கொல்லப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஒரு குடிமகள் கொல்லப்பட்டதோடு, நிர்வாணமாக அவரது உடல் ஹமாஸ் குழுவினரால் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.