உலகம்

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் கலக்கம்!

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் கலக்கம்!

ச. முத்துகிருஷ்ணன்

மெய்நிகர் பணமான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மெய்நிகர் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் செல்சியஸ் (Celsius) நிறுவனம் கடந்த வாரம், திடீரென பரிவர்த்தனையை நிறுத்தியது. இதனால் பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் பணங்களின் மதிப்பு கடுமையாக சரிவடைந்தது.

ஒரு பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 20 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் கீழ் அதாவது 17 ஆயிரத்து 593 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் மதிப்பு 18 ஆயிரத்து 556 டாலராக ஆக இருந்தது.