உலகம்

ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடை: உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடை: உக்ரைன் அறிவிப்பு

JustinDurai

ரஷ்யாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்வதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு தயாரிப்பையும், இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என அம்மாநில பொருளாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24அன்று தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே சரக்கு சேவை மறைமுகமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, இறக்குமதியை முற்றிலும் ரத்து செய்வதாக அறிவிப்பாகவே வெளியிட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக, ரஷ்யா-உக்ரைன் இடையே 600 கோடி ரூபாய் அளவிற்கு, இறக்குமதி சேவை இருந்து வந்தது.

இதையும் படிக்க: உக்ரைன் போர் வீதிகளில் நடந்தே சென்ற பிரிட்டன் பிரதமர்