உலகம்

இலங்கையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம்- பொருளாதார நெருக்கடி குறித்து முக்கிய ஆலோசனை

JustinDurai

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அந்நாட்டு அரசு இன்று ஏற்பாடு செய்துள்ளது.

அன்னிய செலாவணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அந்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச, அனைத்துக் கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று, இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: இப்படி செய்யலாமே’.. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த இம்ரான் கான் புதிய யோசனை