niger
niger pt web
உலகம்

அதிபரை வீட்டுக்காவலில் வைத்து தேசிய தொலைக்காட்சியில் உரையாடிய கிளர்ச்சியாளர்கள்; நைஜரில் பரபரப்பு

Angeshwar G

1960களில் பிரான்ஸின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த நாடு நைஜர். இது மேற்கு ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தை சேர்ந்தது. இந்நாட்டில் ரணுவக் கிளர்ச்சிகள் அடிக்கடி நடக்கும் ஒன்று. 1960களில் இருந்தே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களுக்கு எதிராக ராணுவ கிளர்ச்சிகள் நடைபெறுவதுண்டு. எனவே இந்நாட்டில் ராணுவ ஆட்சியும் தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியும் மாறி மாறி நடந்த வண்ணமே இருந்துள்ளது.

முன்னாள் அதிபர் இஸோஃபோ கடந்த 2020 ஆம் ஆண்டு பதவிவிலகியதை அடுத்து நைஜரின் 10 ஆவது அதிபராக முகமது பசௌம் தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2 2021 ஆம் ஆண்டு அவர் பதவியேற்பதற்கு இரு நாட்களுக்கு முன் ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது அரசு அதை முறியடித்தது.

கடந்த புதன்கிழமை அன்று அதிபர் முகமது பசௌம், தனது ஆட்சிக்கு எதிராக சிலர் கிளர்ச்சியில் ஈடுபட முயல்வதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று அரசுத் தொலைக்காட்சியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபரை பதவியை பறித்துவிட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், அதிபர் மற்றும் அவரது மனைவியை காப்பதே தங்களது முதன்மையான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளனர். அதிபரும் அவரது மனைவியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிபரை மீட்பதற்காக கிளம்பிய அவரது ஆதவளார்கள் மீதும் துப்பாக்கிச்சூடுகளை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இது குறித்து பேசிய ராணுவத்தினர், அரசின் தவறான நடவடிக்கைகளால் நாட்டின் சமூகம், பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இதன் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கைக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு தெரிவிக்கையில், “ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டாலும் அதை ஏற்கப்போவதில்லை” என தெரிவித்துள்ளனர்.