மியான்மரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா.வின் மெத்தனப் போக்கே காரணம் என மனித உரிமைகள் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
மியான்மர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா.வில் நாளை ரகசிய கூட்டம் நடக்கவுள்ளது. அதை கண்டித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பொதுமன்னிப்பு அமைப்பு மியான்மர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வெளிப்படையாக பேச வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. மியான்மரில் ஒரு இனத்தையே கூண்டோடு அப்புறப்படுத்த மிகப் பெரிய அளவில் முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மியான்மர் அரசு மீது வலுவான தடைகளை கொண்டு வர வேண்டும் என்றும் அந்த அமைப்பு ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது.