கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக நியூசிலாந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி, கடந்த 20 நாட்களாக வெலிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வந்தனர். இந்நிலையில், கட்டடத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டக்காரர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தின்போது, காவல் அதிகாரிகள் மூன்று பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்த சூழலில், நியூசிலாந்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை கடந்துள்ளது.
இதையும் படிக்க: ரஷ்யாவுக்கு மற்றொரு விஷயத்தில் தடை விதித்த கனடா: அது என்ன?