உலகம்

கடும் பொருளாதார சிக்கல் - இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

கடும் பொருளாதார சிக்கல் - இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

JustinDurai

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி, இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நுகேகொட பகுதியில் நடந்த பேரணியில், ஏராளமானோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தெல்கட சந்தியிலிருந்து நுகேகொட சந்திவரை பேரணியாகச் சென்றனர். மக்களை துன்புறுத்தும் அரசை, துரத்தியடிப்போம் என்று முழக்கமிட்டனர்.

போராட்டத்தின்போது பேசிய ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார, ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டிய நெருங்கிவிட்டதாக தெரிவித்தார். போராட்டத்தின் காரணமாக நுகேகொடவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அதிபர் தலைமையில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதையும் படிக்க: அத்யாவசியப் பொருட்களுக்கு தவிக்கும் மக்கள் - கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை