உலகம்

லாரியின் அடியில் மாட்டிக்கொண்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

லாரியின் அடியில் மாட்டிக்கொண்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

webteam

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், லாரியின் அடியில் மாட்டிய போதும், சிறு காயங்கள் இன்றி உயிர் பிழைத்த சம்பவம்
அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், விபத்துகள் ஏற்படும் நபர்களுக்கு நேரம் சாதகமாக இருந்தால்
அவர்களால் கண்டிப்பாக உயிர் தப்ப முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் சில சாலை விபத்துகள் நேரிடுகின்றன. அந்த வகையைச் சேர்ந்த
விபத்துதான் இது.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பெண் ஒருவர், யூ ட்ரெனில் திரும்பும்போது அருகில் வந்த லாரியின் அடியில் மாட்டிக் கொண்டார்.
அந்தப்பெண்ணும், அவருடைய ஸ்கூட்டரும் லாரியில் மாட்டிக்கொண்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்படுகிறது. அதன் பின்பு விபத்தை உணர்ந்த
ஓட்டுநர் பொறுமையாக லாரியை நிறுத்துகிறார். பின்பு வண்டியின் அடியில் மாட்டிக்கொண்ட அந்த இளம்பெண் சிறு காயங்களும் இன்றி, எழுந்து
நிற்கி்றார். பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த காட்சிகள், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.