2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லையம்ஸும், வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி புறப்பட்டனர்.
ஜூன் 6ஆம் தேதி, ஸ்டார்லைனர் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
ஜூன் 18இல் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறு மற்றும் ஹீலியம் கசிவு காரணமாக பூமி திரும்புவது தள்ளிப்போனது.
ஜூலை 2ஆம் தேதி, முதலில் 45 நாட்கள் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர் தொழில்நுட்ப கோளாறுகளால் திட்டம் நீட்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 24இல், ஸ்டார்லைனர் விண்கலம் மட்டுமே பூமி திரும்பும் என்றும், சுனிதாவும், வில்மோரும் பிப்ரவரி மாதம் வரை விண்வெளி நிலையத்திலேயே இருப்பர் எனவும் நாசா அறிவித்தது.
செப்டம்பர் 7ஆம் தேதி, பணிக்குழுவின்றி நியூ மெக்சிகோ பகுதியில் ஸ்டார்லைனர் விண்கலம் தரையிறங்கியது.
செப்டம்பர் 22இல், சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சுனிதா வில்லியம்ஸ்...
செப்டம்பர் 28ஆம் தேதி, இருவரையும் பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன்-9 விண்கலம் விண்ணில்
செலுத்தப்பட்டது.
நவம்பர் 12ஆம் தேதி, சுனிதா வில்லியம்ஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. தொடர்ந்து, சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் இருப்பதாகவும், உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும் வீடியோ வெளியிட்டது நாசா..
2025 ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண் நடை மேற்கொண்ட விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார். அவர் 62 மணி நேரம், 6 நிமிடங்கள் விண் நடை மேற்கொண்டிருந்தார்.
மார்ச் 14ஆம் தேதி, க்ரூ 9 விண்கலம் பூமி திரும்ப ஏதுவாக, க்ரூ 10 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
மார்ச் 18 காலை 8.45 மணி அளவில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கி புறப்பட்டது க்ரூ 9 விண்கலம்...
மார்ச் 19ஆம் தேதி, 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்து, அதிகாலை 3.27 மணி அளவில், அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்பகுதியில் இறங்கியது டிராகன் விண்கலம்... அங்கு தயாராக
இருந்த கப்பலில் டிராகன் விண்கலம் ஏற்றப்பட்டு, அதில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் அழைத்து வரப்பட்டனர்.