ஹேட்டல் பில்
ஹேட்டல் பில் PT
உலகம்

சாப்பிட்ட பில் ரூ.2000 தான்.. ஆனா கஸ்டமர் கொடுத்த டிப்ஸ் ரூ.8 லட்சம்; பின்னணியில் உருக்கமான காரணம்!

Jayashree A

கொடுக்குற தேவதை கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்பார்கள். அது எப்போ கொடுக்கும் யாருக்கு கொடுக்கும் என்று யாருக்குமே தெரியது. அப்படி ஒரு தேவதை ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு டிப்ஸ் மூலம் 8 லட்சத்தை கொடுத்து சென்றிருக்கிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் உணவகத்தில் (Michigan restaurant) உணவருந்த வந்த வாடிக்கையாளர் ஒருவர் டிப்சாக 8 லட்ச ரூபாயை தந்து இருக்கிறார். இதைபற்றி அந்த உணவகம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

”நான் அழுகிறேன், நீ அழுகிறாய், நாங்கள் அனைவரும் அழுகிறோம்" என்ற தலைப்புடன் வாடிக்கையாளர் ஊழியர்களுக்கு செலுத்திய டிப் உட்பட பில்லின் படத்தை உணவகம் பகிர்ந்துள்ளது.

மிச்சிகன் உணவகத்தில் உணவருந்திய ஒருவர் தனது செயலால் அங்கிருக்கும் ஊழியர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

நடந்தது என்ன?

மிக்சிகன் உணவகத்தில் மார்க் என்ற வாடிக்கையாளர் உணவருந்த வந்துள்ளார். சாப்பிட்டபிறகு அவர் செலுத்தவேண்டிய தொகை $32.43 (தோராயமாக ₹ 2,000) வந்துள்ளது. பில்லில் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்திய மார்க் தனக்கு உணவு பரிமாரிய பணியாளருக்கு டிப்சாக ரூபாய் பில்லில் $10,000 (தோராயமாக ₹ 8 லட்சம்) கொடுத்துள்ளார். இவரின் இச்செயல் அங்கிருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்தின் மேலாளர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் “பொதுவாக வாடிக்கையாளர்கள் அதிகபட்டமாக ஆயிரகணக்கில் டிப்ஸ் தந்து இருக்கிறார்கள் ஆனால் இத்தனை பெரிய தொகை டிப்சாக கிடைத்திருப்பது அவர்களுக்கு இதுவே முதல் முறை” என்று கூறியிருக்கிறார்.

வாடிக்கையாளரான மார்க் ஏன் இத்தகைய பெருந்தொகையை டிப்ஸாக வழங்கினார் என்பதற்கான காரணத்தையும் ஊழியர்களிடையே கூறியுள்ளார்.

அதாவது இறந்த அவரது நண்பணின் நினைவாக இத்தொகையை அளிப்பதாக அவர் கூறியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இண்ட்ஸ்ராகிராம் பக்கத்தில் உணவக உரிமையாளார், ”i am crying you are crying we are all crying" என்று இத்தகவலை பகிர்ந்துள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது.