Zoey Williams
Zoey Williams twitter
உலகம்

ஏர் கனடா போயிங் 777 விமானம்: 27 வயதில் இயக்கிய முதல் ஆப்ரோ அமெரிக்கப் பெண்!

Prakash J

கனடாவின் ’ஏர் கனடா’ நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் ஆப்ரோ அமெரிக்கப் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams. இந்தப் பெருமையை அவர் 27 வயதிலேயே பெறுவதற்கு, அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. அவரது தந்தையே குருநாதராக இருந்துள்ளார். ஒருமுறை அவரது தந்தை சிறியரக விமானத்தை Zoey Williams-விடம் கொடுத்து இயக்கச் சொன்னபோது அவர் பயந்துள்ளார். அந்தப் பயத்தில், ’இனி நான் விமானத்தை இயக்கவே மாட்டேன்’ என்று சொன்ன, Zoey Williamsதான் இன்று, வியத்தகு பெருமையைப் பெற்றுள்ளார். Zoey, விமானத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ளார். இசை மீது ஆர்வம் கொண்ட Zoey ஒரு பாடகியும்கூட. அத்துடன், தங்கள் கனவுகளை பின்தொடரும்படி சிறுபிள்ளைகளுக்கு உத்வேகமளிக்கும் Go Where You Belong என்னும் புத்தகத்தையும் எழுதிவருகிறார்.

உத்வேகம் குறித்து அவர், “உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆசை இருந்தால், அதை அடக்கி வைக்காதீர்கள். உங்கள் கவனத்தை அதன்மீது வைத்திருங்கள், அதற்கான நெட்வொர்க்குகளை உருவாக்குங்கள். உங்கள் இலக்குகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அத்துடன், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள். அப்போதுதான் நீங்கள் விரும்பும் செயல்களை தினமும் செய்து முடிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.