உலகம்

பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் துணை பிரதமர் வரவேற்பு

webteam

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கபதற்காக  கிர்கிஸ்தானுக்கு சென்றடைந்த மோடியின் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  

கிர்கிஸ்தானின் பிஸ்கேக் நகரில் இரு தினங்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸீ ஜிங்பிங்-கை பிரதமர் மோடி தனியே சந்தித்து பேசுகிறார். இதே மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்‌ பிரதமர் இம்ரான்கானை, பிரதமர் மோடி சந்திக்கமாட்டார் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிஸ்கேக் நகர விமானநிலையத்தில் இறங்கியதற்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “கிர்கிஸ்தான் குடியரசின் மரியாதைக்குரிய  துணை பிரதமர் ஸாமிர்பெக் மரிப்பேவிச் அஸ்கரவ் அவர்கள் பிரதமர் மோடியை விமானநிலையம் வந்து வரவேற்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.