அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே நடைபெறும் சந்திப்பு உலகத் தலைவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
சிங்கப்பூரை உருவாக்கிய 63 தீவுகளில் சென்டோசாவும் ஒன்று. சுமார் 1,250 ஏக்கர் பரப்பளவுடைய சென்டோசா தீவு, சிங்கப்பூர் நகரத்தில் இருந்து குறுகிய தொலைவில்தான் அமைந்துள்ளது. ஆடம்பர உல்லாச விடுதிகள், தனியார் கப்பல் மற்றும் ஆடம்பர கோல்ஃப் கிளப்கள் அமைந்துள்ள இடமாகும். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள சென்டோசாவுக்கு இருண்ட வரலாறும் உண்டு.
கடற்கொள்ளை, போர்க்களம் என்ற வேறு முகமும் இந்தத் தீவுக்கு இருக்கிறது. 19ம் நூற்றாண்டு ஆங்கிலேயரின் வணிகப் பிரதேசமாக சிங்கப்பூர் நிறுவப்பட்டது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான கடல்வழிப் பாதையில்தான் சிங்கப்பூரின் முக்கிய இடமான சென்டோசா தீவு அமைந்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னதாகவும், சிங்கப்பூர் வளர்ந்து வந்த வணிக மையமாக திகழ்ந்தது. வணிகர்களும், வர்த்தகர்களும், கடற்கொள்ளையரும் கூட அடிக்கடி சந்திக்கிற இடமாக இது திகழ்ந்தது. அக்காலத்தில் சென்டோசா தீவு புலாவ் பிலாகாங் மாதி என்று அறியப்பட்டது. இதற்கு இறப்புக்கு பிந்தைய தீவு என்று பொருள். அதிக கடற்கொள்ளையர் இருந்ததை இந்த பெயர் காட்டுகிறது.
1942ம் ஆண்டு இரண்டாம் உலகக் போரில் சிங்கப்பூர் ஜப்பானிடம் தோல்வியடைந்தது. தெற்கின் விளக்கு என்று பொருள்படுகின்ற சயோனாம் என்ற ஜப்பானிய பெயர் இந்த தீவுக்கு வழங்கப்பட்டது. ஜப்பானிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையின் பேரில், சீன மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சென்டோசாவின் கடற்கரை தற்போது கேபெல்லா ஹோட்டலால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஹோட்டலில்தான் அதிபர் ட்ரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்திக்கவுள்ளனர்.