அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் கலாசாரம் கொண்ட நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வெனிஸ் நகரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெனிசூலா வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அதிகப்படியான சுற்றுலாவை சமாளிக்கும் முயற்சியாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வெனிஸ் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஒரு சிலருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: நொடிப்பொழுதில் பூகம்பத்தை உணர்ந்த தந்தை.. மகளை தூக்கிக்கொண்டு ஓடிய வைரல் வீடியோ!