உலகம்

அரியணையில் 70 ஆண்டுகள் ! 'பார்பி' பொம்மை உருவத்தில் எலிசபெத் ராணி

JustinDurai

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக ராணியின் உருவம் பார்பி பொம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு மன்னர் ஜார்ஜின் மறைவைத் தொடர்ந்து, இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறினார். இந்த சரித்திரம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை பிளாட்டினம் ஜூப்ளியாக இங்கிலாந்து முழுவதும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். ராணியின் 96 ஆவது பிறந்த நாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ராணியின் உருவத்தை பார்பி வடிவத்தில் உருவாக்கி வெளியிட்டுள்ளது. அந்த 'ராணி பார்பி' பொம்மையில், ராணி எலிசபெத் தனது திருமண நாளில் அணிந்திருந்த கிரீடமும் இடம்பெற்றுள்ளது. ராஜ குடும்பத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தும்விதமாக இங்கிலாந்து மக்கள் இந்த பொம்மையை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்திய வம்சாவளிப் பெண்