உலகம்

காத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

காத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

rajakannan

சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றடைந்தார்.

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங், தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மதியம் 1.30 மணிக்கு நேபாளம் புறப்பட்டார். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் விமான நிலையத்திற்கு 4.30 மணியளவில் சென்றடைந்தார்.

சீன அதிபருக்கு விமான நிலையத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.ஷர்மா மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, இருநாட்டு அதிபர்களும் ஷூடல் நிவாஸில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.