சீனாவில் இருந்து விண்வெளிக்கு சென்ற 3 வீரர்கள், 6 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சென்சூ-13 என்ற விண்கலம் மூலம் 3 வீரர்கள் விண்ணிற்கு சென்றனர். அவர்கள், விண்வெளி நிலையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். 6 மாதம் நிறைவடைந்த நிலையில், 3 பேரும் மங்கோலியப் பகுதியில் பத்திரமாக தரையிறங்கினர். ஏற்கனேவ 7 முறை விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்பியுள்ள நிலையில், 8-வது முறை சென்ற இம்மூன்று பேரும் அதிக நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: மூடப்படும் இலங்கை பங்குச்சந்தைகள்..! எப்போது திறக்கப்படும்..?