உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

webteam

2017 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்படும். 2017 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார். மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளான ஜேக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹெண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவரும் இந்தப் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். பரிசுத் தொகை ரூ.7 கோடி மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்தாண்டும் வேதியியல் பிரிவில் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.