உலகம்

இரண்டாம் உ‌லகப் போரில் வீசப்பட்ட 1.4 ‌டன் ‌எடையுள்ள குண்டு செயலிழப்பு

இரண்டாம் உ‌லகப் போரில் வீசப்பட்ட 1.4 ‌டன் ‌எடையுள்ள குண்டு செயலிழப்பு

webteam

இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் ‌வீசப்பட்ட வெடிகுண்டை அந்நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.

‌இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்தபோது ஜெர்மனி மீது பிரிட்டன் குண்டு மழை பொழிந்தது. அதில் ஏராளமான வெடிகுண்டுகள் வெடிக்காமல் மண்ணில் புதைந்தன. ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் டன் வெடிகுண்டுகளை ஜெர்ம‌னி அதிகாரிகள் க‌ண்டுபிடித்து செயலிழக்‌க வைத்து வருகின்ற‌‌னர்.

அந்த வகையில் பிராங்பர்‌ட் நகரில்‌ 1.4 டன் ‌எடை கொண்ட வெடிகு‌ண்டை, நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் தோண்டி எடுத்து செ‌யலிழக்க வைத்தனர். முன்னெச்சரிக்கை நட‌வடிக்கையாக அந்தப் பகுதியில் வசித்து வந்த 65,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் பிராங்பர்ட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.