ஆசியாவிலேயே முதல் நாடாக தாய்லாந்து, போதைப் பொருளான கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்திலும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும் கஞ்சாவுக்கு அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொழுது போக்கிற்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு தடை தொடர்வதாக அவர் எச்சரித்துள்ளார்.
உணவில் கஞ்சா சேர்த்து சமைக்கலாம் என்றும், ஆனால் போதை தருகிற பொருள் 0.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வீடுகளில் 6 கஞ்சா செடிகள் வரை தொட்டிகளில் வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை தொடர்ந்து கஞ்சா தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.