உலகம்

தஞ்சம் கோரிய கோட்டாபய... தற்காலிக அனுமதியளித்த தாய்லாந்து - நிபந்தனைகள் என்னென்ன?

webteam

இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாய ராஜபக்ச தற்காலிகமாக தங்கள் நாட்டில் தங்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அந்நாட்டு அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்து விட்டு மாலத்தீவுக்கு தப்பினார். ஒரு சில நாட்களில் அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் கோட்டாபய தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவதால் வேறு நாடுகளில் அவர் தஞ்சம் கோரினார்.

இந்நிலையில் தங்கள் நாட்டில் கோட்டாபய தற்காலிகமாக தங்க அனுமதி அளிப்பதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா தெரிவித்தார். தாய்லாந்தில் கோட்டாபய தற்காலிகமாக தங்க மனிதாபிமான அடிப்படையில் அனுமதிப்பதாகவும் எனினும் அவர் அரசியல் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சீனாவில் பரவத் துவங்கும் பல மடங்கு ஆபத்தான லாங்யா வைரஸ்: WHO எச்சரிக்கை