உலகம்

ஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு!

ஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு!

webteam

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் இறுதி சடங்கு நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே தகனம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

71 ஆண்டுகள் வரை மன்னராக இருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி காலமானார். ஓராண்டாக அவரது பூதவுடல் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி நாளை தகனம் செய்யப்படுகிறது. இதற்காக பாங்காக்கில் பிரத்யேக தகன மேடையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே தகன‌ம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமான மக்கள் குவிந்து வந்த வண்ணம் உள்ளனர். நாளை நடைபெறவுள்ள இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.