உலகம்

“இத்தனை ஆண்டுகளா என நம்ப முடியவில்லை” -பெஸாசுடன் இருக்கும் ஃபோட்டோ குறித்து எலான் மஸ்க்

“இத்தனை ஆண்டுகளா என நம்ப முடியவில்லை” -பெஸாசுடன் இருக்கும் ஃபோட்டோ குறித்து எலான் மஸ்க்

EllusamyKarthik

அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாசுடன் தான் இருக்கின்ற படம் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தன்னால் நம்ப முடியவில்லை என டெஸ்லாவின் எலான் மஸ்க் கூறியுள்ளார். கடந்த 2004-இல் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவரும் ‘விண்வெளி’ குறித்து விரிவாக பேசி உள்ளனர்.

அந்த சந்திப்பின்போது எடுக்கபட்ட படத்தைதான் பத்திரிகையாளர் Trung Phan ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதற்கு தான் மஸ்க் இந்த கமெண்டை போட்டுள்ளார். மஸ்க் மற்றும் பெஸாஸ் இடையே நிகழ்ந்த அரிதான சந்திப்புகளில் இது ஒன்று.


இருவரும் தற்போது உலகின் முதல் நிலை பணக்காரர்களுக்கான இடத்தை பிடிப்பதில் பிஸியாக உள்ளனர்.