ஈரான் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய இடங்களிலும், தலைநகர் தெஹ்ரானிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஈரானில் ஜிகாதி தாக்குதல் நடத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, ஈரானில் உள்ள ஷியா பிரிவினர் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என மிரட்டியது குறிப்பிடத்தக்கது.