கனடாவின் வென்கோவர் நகரில் நேற்றைய தினம் (27.4.2025) பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஃபிலிபினோ சமூக மக்களின் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அப்போது திடீரென ஒரு கார் வேகமாக வந்து அங்கிருந்தவர்களை இடித்து தள்ளியபடி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், கூட்டத்தினர் மீது மோதியது.
கார் மோதி அங்கிருந்தவர்களை இடித்து தள்ளியபடி சென்றது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். இன்று இரவு 8 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் விபத்தை ஏற்படுத்தியது கருப்பு நிற எஸ் யூ வி சொகுசு கார் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது விபத்து தானா? அல்லது பயங்கரவாத தாக்குதல் சதியா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய முழு விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.