உலகம்

‘கிம் ஜாங் உன்’ தந்தையின் நினைவு நாள் - நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க வடகொரியா தடை

EllusamyKarthik

வடகொரிய நாட்டு மக்களுக்கு வினோதமான தடையை அமல் செய்துள்ளது அந்த நாட்டு அரசு. அதிபர் கிம் ஜாங் உன்-இன் தந்தை கிம் ஜாங் இல்-இன் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாட்டு மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல், கடந்த 2011 டிசம்பர், 17 அன்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வட கொரிய நாட்டு மக்கள் மது அருந்த, மளிகை சாமான்கள் வாங்க, ஷாப்பிங் செல்ல, பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் அரசு தடை விதித்துள்ளதாம். இதனை அந்த நாட்டின் எல்லை நகரமான சினுய்ஜூவில் வசிக்கும் ஒருவர் ‘ரேடியோ ஃப்ரீ ஏசியா’விடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அரசின் இந்த தடையை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்க மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இது மாதிரியான தடைகள் அமலில் இருந்தபோது அதனை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது கூட யாருக்கும் தெரியாதாம். 

கிம் ஜாங் இல்-இன் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளாதம் வடகொரிய அரசு.